பாராளுமன்றத்தின் சிறப்பு கூட்டம் 19ஆம் தேதியிலிருந்து புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெறுகிறது.
பாராளுமன்ற சிறப்பு கூட்டம் 18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடக்கிறது. இதில் முதல் நாள் மட்டும் பழைய பாராளுமன்ற கட்டிடத்தில் கூட்டம் நடை பெறும். அதன் பின் 19 ஆம் தேதியிலிருந்து புதிய கட்டடத்தில் கூட்டம் நடைபெற இருக்கின்றது. புதிய கட்டிடத்திற்கு மாறும்பொழுது ஊழியர்களின் சீருடைகளும் மாற்ற பட்டுள்ளது. பாராளுமன்ற செயலகத்தில் ஐந்து பிரிவுகளை சேர்ந்த ஊழியர்கள் பணியாற்றியார்கள். ஒவ்வொரு பிரிவிற்கும் ஏற்றவாறு நிறம் தேர்ந்தெடுக்கப்பட்டு சபாரி சூட்டை சீருடையாக அணிந்து வருகின்றனர். இதில் புதிய சீருடை இந்திய தன்மையுடன் அமைந்துள்ளது. அதில் ஊழியர்கள் ஆண் ஊழியர்களுக்கு நேரு ஜாக்கெட் பாணியில் இளஞ்சிவப்பு நிற சட்டையும் காக்கி நிற பேண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏராளமான தாமரை படங்கள் இடம் பெற்றுள்ளன. அதேபோல் சபை காவலர்களுக்கு சீருடை உடன் மணிப்பூர் தலைப்பாகையும் உண்டு. பெண் ஊழியர்களுக்கு சேலை சீருடையாக வழங்கப்பட்டுள்ளது.
அங்கு மொத்தம் இரு அவைகளில் உள்ளேயும் வெளியேயும் 277 ஊழியர்கள் பணியாற்றுவார்கள். அவர்கள் அனைவருக்கும் சீருடை வழங்கப்பட்டுள்ளது இதில் தாமரை படம் இடம்பெற்றதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தாமரை என்பது தேசிய மலர் ஆகும் ஆனால் அது பாஜகவின் தேர்தல் சின்னம் என்பதால் சர்ச்சை எழுந்துள்ளது.