மேகாலயா முதல்வராக மீண்டும் கான்ராட் சங்மா மார்ச் 7-ல் பதவியேற்பு

மேகாலயா முதல்வராக மீண்டும் கான்ராட் சங்மா மார்ச் 7-ல் பதவியேற்க உள்ளார். மேகாலயாவில் கடந்த 27-ம்தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இங்கு மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் 59 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின. இதில், என்பிபி கட்சி 26 தொகுதிகளில் வென்றது. ஐக்கிய ஜனநாயக கட்சி 11 இடங்களிலும், காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் ஆகியவை தலா 5 தொகுதிகளிலும், பாஜக 2 இடங்களிலும் வென்றன. எந்தகட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. என்பிபி […]

மேகாலயா முதல்வராக மீண்டும் கான்ராட் சங்மா மார்ச் 7-ல் பதவியேற்க உள்ளார்.

மேகாலயாவில் கடந்த 27-ம்தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இங்கு மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் 59 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின. இதில், என்பிபி கட்சி 26 தொகுதிகளில் வென்றது. ஐக்கிய ஜனநாயக கட்சி 11 இடங்களிலும், காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் ஆகியவை தலா 5 தொகுதிகளிலும், பாஜக 2 இடங்களிலும் வென்றன. எந்தகட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. என்பிபி கட்சித் தலைவர் கான்ராட் சங்மா மீண்டும் ஆட்சி அமைக்க ஆதரவு தருவதாக பாஜக கூறியுள்ளது.

இந்நிலையில், மேகாலயா ஆளுநர் பகு சவுகானை சந்தித்த கான்ராட் சங்மா, தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டு, மேகாலயாவில் புதிய ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அவர் உட்பட என்பிபி எம்எல்ஏக்கள் 26 பேர், பாஜக எம்எல்ஏக்கள் 2 பேர், ஒரு சுயேச்சை என மொத்தம் 29 எம்எல்ஏக்கள் ராஜ்பவனில் இருந்தனர். அவரை ஆட்சி அமைக்குமாறு ஆளுநர் பகு சவுகான் அழைப்பு விடுத்தார். இதையடுத்து மேகாலயா முதல்வராக கான்ராட் சங்மா வரும் 7-ம் தேதி மீண்டும் 2-வது முறையாக பொறுப்பேற்கிறார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu