செம்பரம்பாக்கத்தில் 21 கிமீ தூரத்துக்கு குழாய் அமைக்கும் பணி - அமைச்சர் கே.என்.நேரு 

March 20, 2023

செம்பரம்பாக்கத்தில் இருந்து கூடுதல் குடிநீர் கொண்டுவர 21 கிமீ தூரத்துக்கு குழாய் அமைக்கும் பணியை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்தார். செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து சென்னைக்கு நாள் ஒன்றுக்கு 225 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அதனை 580 மில்லியன் லிட்டராக அதிகரிக்கும் வகையில், செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் முதல் கோயம்பேடு வரை 21 கிமீ தூரத்துக்கு ரூ.43.75 கோடி மதிப்பீட்டில் 2-ம் பிரதான குழாய் அமைக்கும் பணிகளை சென்னைக் குடிநீர் வாரியம் […]

செம்பரம்பாக்கத்தில் இருந்து கூடுதல் குடிநீர் கொண்டுவர 21 கிமீ தூரத்துக்கு குழாய் அமைக்கும் பணியை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்தார்.

செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து சென்னைக்கு நாள் ஒன்றுக்கு 225 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அதனை 580 மில்லியன் லிட்டராக அதிகரிக்கும் வகையில், செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் முதல் கோயம்பேடு வரை 21 கிமீ தூரத்துக்கு ரூ.43.75 கோடி மதிப்பீட்டில் 2-ம் பிரதான குழாய் அமைக்கும் பணிகளை சென்னைக் குடிநீர் வாரியம் மேற்கொண்டு வருகிறது.

இப்பணியை நேற்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, பூந்தமல்லி புறவழிச் சாலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் 20 அடி ஆழத்தில் நவீன தொழில் நுட்பத்துடன் குழாய் பதிக்கும் பணிகளை குழாய்க்குள் இறங்கி பார்வையிட்டார். இப்பணியை குறித்த காலத்துக்குள் திறம்பட மேற்கொள்ளுமாறு அதிகாரிகளை அப்போது அறிவுறுத்தினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu