உலகின் அதிசக்தி வாய்ந்த ரேடியோ டெலஸ்கோப்பை கட்டமைக்கும் பணி தொடங்கியுள்ளது.
உலகின் மிகப்பெரிய ரேடியோ விண்வெளி ஆராய்ச்சி மையமான ஸ்கொயர் கிலோமீட்டர் அரேயில் (SKA), ரேடியோ தொலைநோக்கி கட்டமைக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் மேற்கு மாகாணம் மற்றும் தென்னாப்பிரிக்காவின் கரூ பகுதி ஆகியவற்றை ஒருங்கிணைத்து இந்த ரேடியோ டெலஸ்கோப் அமைக்கப்படுகிறது.
ஆஸ்திரேலியா பகுதியில் 130000 ஆண்ட்டனாக்கள் கட்டமைக்கப்படுகின்றன. இவை கிறிஸ்துமஸ் மரம் போன்ற அமைப்பில் இருக்கும். ஆப்பிரிக்க பகுதியில் 197 டிஷ்கள் அமைக்கப்படும். ஆஸ்திரேலியன் பகுதி ஆண்ட்டனாக்கள், 50 முதல் 350 மெகா ஹெர்ட்ஸ் வரையிலான ஃப்ரீகுவன்ஸி அலைகளை கண்டறியும். ஆப்பிரிக்கன் பகுதி டிஷ் கட்டமைப்புகள், 350 மெகா ஹெர்ட்ஸ் முதல் 15.4 ஜிகா ஹெர்ட்ஸ் வரையிலான ஃப்ரீகுவன்ஸி அலைகளை கண்டறியும்.
21 ஆம் நூற்றாண்டின் மாபெரும் அறிவியல் திட்டமாக இது அமைந்துள்ளது. இந்த திட்டம் மூலம், பிரபஞ்சத்தின் தொடக்கம் குறித்த பல தகவல்கள் அறியப்படும் என்று கருதப்படுகிறது.