தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்குவது குறித்து அக்டோபர் 10ல் ஆலோசனை

October 8, 2022

தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்குவது குறித்து நாளை மறுநாள் போக்குவரத்து துறை அமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் கடந்த வாரம் முழுக்க ஆயுத பூஜை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. அடுத்து தீபாவளி பண்டிகை வரும் 24ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அதற்கான சிறப்பு பேருந்துகள் இயக்குவது குறித்து இன்னும் முடிவாகவில்லை. இது குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்து துறை செயலர் கோபால் மற்றும் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர்களுடன் நாளை […]

தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்குவது குறித்து நாளை மறுநாள் போக்குவரத்து துறை அமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

தமிழகத்தில் கடந்த வாரம் முழுக்க ஆயுத பூஜை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. அடுத்து தீபாவளி பண்டிகை வரும் 24ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அதற்கான சிறப்பு பேருந்துகள் இயக்குவது குறித்து இன்னும் முடிவாகவில்லை. இது குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்து துறை செயலர் கோபால் மற்றும் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர்களுடன் நாளை மறுநாள் காலை 11:00 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் நடக்க உள்ள இந்த ஆலோசனைக்குப் பின், சென்னையில் இருந்து வெளியூர்களுக்கும், மற்ற மாவட்டங்களில் இருந்தும் இயக்கப்பட வேண்டிய சிறப்பு பேருந்துகள் குறித்தும், பாதுகாப்பு, சிறப்பு பேருந்து நிலையங்கள், வழித்தட மாற்றங்கள் குறித்தும் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu