எரிவாயு நுகர்வு 12.4% சரிவு

June 23, 2023

கடந்த மே மாதத்தில், இந்தியாவின் எரிவாயு நுகர்வு 12.4% குறைந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. கடந்த மாதத்தில் மொத்தமாக 5066 மில்லியன் மெட்ரிக் ஸ்டாண்டர்ட் கியூபிக் மீட்டர் அளவில் எரிவாயு நுகர்வு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், 2024 ஆம் நிதி ஆண்டின் தொடக்கம் முதலே எரிவாயு நுகர்வு சரிந்து வருவதாக கூறப்படுகிறது. அதன்படி, கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், இந்தியாவின் எரிவாயு நுகர்வு முந்தைய ஆண்டின் ஏப்ரல் மற்றும் மே மாதங்களை விட 3.4% குறைவாக உள்ளது. அதே […]

கடந்த மே மாதத்தில், இந்தியாவின் எரிவாயு நுகர்வு 12.4% குறைந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. கடந்த மாதத்தில் மொத்தமாக 5066 மில்லியன் மெட்ரிக் ஸ்டாண்டர்ட் கியூபிக் மீட்டர் அளவில் எரிவாயு நுகர்வு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், 2024 ஆம் நிதி ஆண்டின் தொடக்கம் முதலே எரிவாயு நுகர்வு சரிந்து வருவதாக கூறப்படுகிறது. அதன்படி, கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், இந்தியாவின் எரிவாயு நுகர்வு முந்தைய ஆண்டின் ஏப்ரல் மற்றும் மே மாதங்களை விட 3.4% குறைவாக உள்ளது.

அதே வேளையில், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட எரிவாயு அளவு 2909 மில்லியன் மெட்ரிக் ஸ்டாண்டர்ட் கியூபிக் மீட்டர் அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டின் உற்பத்தியின் அதே அளவாகும். ஆனால், உற்பத்திக்கு பின் வெளியிடப்பட்ட எரிவாயு அளவு 1.5% குறைவாகும். மேலும், கடந்த மே மாதத்தில் இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயு அளவு வருடாந்திர அடிப்படையில் 24% குறைந்து 2228 மில்லியன் மெட்ரிக் ஸ்டாண்டர்ட் கியூபிக் மீட்டர் அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எரிவாயு நுகர்வில் காணப்படும் இந்த சரிவு மிகவும் ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது என்று கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu