உச்ச நீதிமன்றம் பதஞ்சலி நிறுவனத்திற்கு கடந்த செவ்வாய் கிழமை அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்திய மருத்துவ சங்கம் பதஞ்சலி நிறுவனம் மீது அலோபதிக்கு எதிரான தவறான தகவல்களை பரப்பி விளம்பரம் வெளியிட்டு மக்களை குழப்புவதாக குற்றம் சாட்டி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தவறான விளம்பரங்களை சகித்துக் கொள்ள முடியாது என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் யோகா குரு ராம் தேவ் நிறுவனத்திற்கு சொந்தமான பதஞ்சலி ஆயுர்வேதா மற்றும் அதன் நிர்வாக இயக்குனர் ஆச்சார்யா பாலகிருஷ்ணன் ஆகியோர் தங்கள் தயாரிப்புகளின் தவறான விளம்பரங்களுக்கு எதிரான உத்தரவை மீறியதற்காக உச்சநீதிமன்றம் அவர்களுக்கு அவமதிப்பு நோட்டீஸ் வழங்கி உள்ளது.














