இந்திய பங்குச் சந்தையில் கடந்த சில தினங்களாக தொடர் ஏற்றங்கள் பதிவாகி வருகின்றன. அத்துடன், ஒவ்வொரு நாளும் புதிய உச்சங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இன்றும் வரலாற்று உச்சப் பதிவுகள் பதிவாகியுள்ளன. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 474.46 புள்ளிகள் உயர்ந்து, 67571.9 புள்ளிகள் ஆக உள்ளது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 146 புள்ளிகள் உயர்ந்து, 19979.15 புள்ளிகளாக உள்ளது.
தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, ஐடிசி, கோட்டக் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, டாக்டர் ரெட்டீஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, எஸ்பிஐ, ஆக்சிஸ் வங்கி போன்றவை ஏற்றமடைந்துள்ளன. அதே வேளையில், ரிலையன்ஸ், இன்ஃபோசிஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், ஹெச் சி எல் டெக் ஆகியவை இறக்கமடைந்துள்ளன. குறிப்பாக, இன்றைய தினத்தில் நிகழ்ந்த ரிலையன்ஸ் - ஜியோ பைனான்ஸ் பிரிப்பு அதன் பங்கு விலையில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இன்போசிஸ் நிறுவனத்தின் காலாண்டு அறிக்கை வெளியீடு, அதன் சரிவில் முக்கிய பங்கு வகிக்கிறது.