2 கோடி பாமாயில் பாக்கெட்களுக்கு ஒப்பந்தப்புள்ளி

March 13, 2023

2 கோடி பாமாயில் பாக்கெட்களுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தில் அரிசி இலவசமாகவும், சர்க்கரை மற்றும் மண்ணெண்ணெய் மானிய விலையிலும், அரிசிக்கு பதில் குறிப்பிட்ட அளவு கோதுமை இலவசமாகவும் வழங்கப்படுகிறது. இதுதவிர தமிழகத்தில் சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின்கீழ் ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு லிட்டர் பாமாயில் ஆகியவை தலா ரூ.25 என்ற மானிய விலையில் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் தற்போது ஒரு லிட்டர் அளவு கொண்ட 2 கோடி பாமாயில் பாக்கெட்களை […]

2 கோடி பாமாயில் பாக்கெட்களுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தில் அரிசி இலவசமாகவும், சர்க்கரை மற்றும் மண்ணெண்ணெய் மானிய விலையிலும், அரிசிக்கு பதில் குறிப்பிட்ட அளவு கோதுமை இலவசமாகவும் வழங்கப்படுகிறது. இதுதவிர தமிழகத்தில் சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின்கீழ் ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு லிட்டர் பாமாயில் ஆகியவை தலா ரூ.25 என்ற மானிய விலையில் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் தற்போது ஒரு லிட்டர் அளவு கொண்ட 2 கோடி பாமாயில் பாக்கெட்களை ரூ.194.52 கோடியில் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தை உணவுத் துறையின்கீழ் வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் கோரியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu