ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் சாதனத்தில் செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் புகுத்தப்படுகின்றன. அதன்படி, ஒருவரின் பார்வையின் வழியாகவே ஐபோனை இயக்க முடியும். கண் கருவிழி நகர்வதை கணக்கிட்டு, பயனரின் விருப்பத்திற்கு ஏற்ப, செயலியை திறப்பது,பொத்தானை அழுத்துவது உள்ளிட்ட செயல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த அம்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என கருதப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மட்டுமின்றி ஐ பேட் சாதனத்தையும் பார்வையாலேயே கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம் கொண்டுவரப்படுகிறது. ஐ போனில் உள்ள முன்பக்க கேமரா இதன் முக்கிய கருவியாக செயல்படுகிறது. இது, முக பாவனை மற்றும் கண் கருவிழி நகர்வு போன்றவற்றை கணித்து செயல்படுகிறது. ஐ ஓ எஸ் 18 மற்றும் ஐபேட் ஓ எஸ் 18 சாதனங்களில் இந்த அம்சம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.