சர்வதேச அளவில் சமையல் எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்து வருவதால், இந்தியாவில் சமையல் எண்ணெய்களின் சில்லறை விலையை குறைப்பது குறித்து ஆலோசிக்க, சமையல் எண்ணெய் தொழில் அமைப்புகள் மற்றும் உற்பத்தியாளர்களின் கூட்டத்திற்கு உணவு அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.
சால்வென்ட் எக்ஸ்ட்ராக்டர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியாவின் (SEA) செயல் இயக்குனர் பி வி மேத்தா கூறுகையில், கடந்த ஒரு மாதத்தில் உலகளாவிய சமையல் எண்ணெய்களின் விலைகள் டன் ஒன்றுக்கு $300-$450 குறைந்துள்ளது. வரும் நாட்களில் சில்லறை எண்ணெய் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய சமையல் எண்ணெய் இறக்குமதியாளரான இந்தியாவின் அதிக கொள்முதல், மலேசிய பாமாயில் விலைக்கு ஆதரவாக இருக்கும்.
ஜூலை மாதத்தில், இந்தியாவின் பாமாயில் இறக்குமதி 700,000 முதல் 800,000 டன்களாக அதிகரிக்கக்கூடும். இது செப்டம்பர் 2021 க்குப் பிறகு மிக அதிகம் என்று விநியோகஸ்தர்கள் தெரிவித்தனர்.
இந்தியா முக்கியமாக இந்தோனேசியா, மலேசியா, அர்ஜென்டினா, பிரேசில் , அமெரிக்கா மற்றும் தாய்லாந்தில் இருந்து பாமாயிலை வாங்குகிறது.
இந்தியா உக்ரைன் மற்றும் ரஷ்யாவில் இருந்து சூரியகாந்தி எண்ணெயை இறக்குமதி செய்கிறது.