எகிப்தில் நடைபெற்று வரும் பருவநிலை மாநாட்டில், ‘பிரேக் ப்ரீ பிளாஸ்டிக்’ என்ற தலைப்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், பிளாஸ்டிக் மாசுபாட்டில் முக்கிய பங்கு வகிக்கும் நிறுவனங்களின் பட்டியல் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில், உலக அளவில் பிளாஸ்டிக் மாசுபாட்டை அதிகமாக கொண்ட நிறுவனமாக கொக்கோகோலா உள்ளது. பெப்சிகோ மற்றும் நெஸ்லே நிறுவனங்களும் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளன. இது சர்வதேச அடிப்படையிலான பட்டியல் ஆகும்.
இந்தியாவைப் பொறுத்தவரை, பெப்சிகோ நிறுவனம் பிளாஸ்டிக் மாசுபாடு ஏற்படுத்துவதில் முன்னணியில் உள்ளது. மேலும், அடுத்தடுத்த நிலையில், Wai Wai Noodles-maker CG Foods India Pvt Ltd மற்றும் Mentos, Alpenliebe மற்றும் Chupa Chups lollipops ஆகிய தயாரிப்புகளின் உரிமையாளரான Parfetti Van Mael ஆகிய நிறுவனங்கள் உள்ளன. அத்துடன், இந்தியாவில், பால் உற்பத்தியாளர்கள் பெருமளவு பிளாஸ்டிக் மாசை ஏற்படுத்துவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.