கோபா அமெரிக்கா கால்பந்து ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது.
அமெரிக்காவில் கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. தற்போது இப்போட்டியின் இறுதிக்கட்டம் நெருங்கியுள்ள வேலையில் அர்ஜென்டினா, கனடா, உருகுவே மற்றும் கொலம்பியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியது. அதன்படி முதல் அரை இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா மற்றும் கனடா அணிகள் மோதியது. பரபரப்பாக துவங்கிய இந்த ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி தனது முதல் கோலை 23வது நிமிடத்தில் அடித்தது. பின்னர் இரண்டாவது பாதையில் அர்ஜென்டினா அணி தனது இரண்டாவது கோலை 51 வது நிமிடத்தில் அடித்தது. இதனைத் தொடர்ந்து அர்ஜென்டினா அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது