கோபா அமெரிக்க கால் பந்து தொடரில் அர்ஜென்டினா அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
அமெரிக்காவில் கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் நடைபெற்று முடிந்துள்ளது. இப்போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா மற்றும் கொலம்பியா அணிகள் வெற்றி பெற்று இறுதி சுற்றுக்கு முன்னேறியது. இன்று காலை நடைபெற்ற இறுதி சுற்று ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி 1-0 என்ற கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. ஆட்டத்தின் தொடக்கத்தில் முதல் பாதியில் இரண்டு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை. அதனைத் தொடர்ந்து போட்டி சமனாகும் சூழ்நிலையில் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து போட்டியின் 112 ஆவது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் தனது முதல் கோலை அடித்தார். இதனால் அர்ஜென்டினா அணி கோப்பையை 1-0 என்ற கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளது.