கோவா அமெரிக்க கால்பந்து தொடரில் உருகுவே மற்றும் பனாமா ஆகிய இரண்டு அணிகள் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளன.
கோபா அமெரிக்க கால்பந்து ஆட்டத்தில் நேற்றைய இரண்டு போட்டிகள் நடைபெற்றது. அதில் பனாமா பொலிவியா அணிகள் இடையேயான ஆட்டத்தில் பனாமா 3-1என்று வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து இரண்டாவது ஆட்டம் உருகுவே மற்றும் அமெரிக்க அணிகளிடையே நடைபெற்றது இதில் உருகுவே அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.அதனைத் தொடர்ந்து சி பிரிவில் உருகுவே மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது. பனாமா இரண்டு போட்டிகளில் வெற்றி ஒரு தோல்வி என்று ஆறு புள்ளிகள் பெற்று இரண்டாவது அணியாக கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது