2 ஆண்டுகளில் முதல் முறையாக, காப்பர் மதிப்பு 10000 டாலர்களை எட்டியுள்ளது.
பசுமை தொழிலகத்தின் அதிகரித்த தேவைகள் காரணமாக, உலக அளவில் காப்பர் பயன்பாடு உயரக்கூடும் என நிபுணர்கள் கூறுகிறார்கள். அந்த வகையில், சர்வதேச அளவில் உள்ள சுரங்கங்கள் காப்பர் தேவையை பூர்த்தி செய்ய அதிக சவால்களை சந்திக்க வேண்டி இருக்கும். இதற்கான சூழல் தற்போது இருந்தே தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது. இதனால், நிகழாண்டில் 17% அளவுக்கு பென்ச்மார்க் விலைகள் உயர்ந்துள்ளது. கடந்த 2022 ஏப்ரல் மாதத்திற்கு பிறகு, முதல் முறையாக, லண்டன் உலோக பரிமாற்ற சந்தையில் காப்பர் மதிப்பு கிட்டத்தட்ட 1.4% உயர்ந்து 10,000 டாலர்களை தாண்டி உள்ளது. இந்த சூழலில், சில பெரு நிறுவனங்கள் மேற்கொண்டு வரும் சுரங்க நடவடிக்கைகள் காரணமாக காப்பர் மதிப்பு மேலும் உயரக்கூடும் என கருதப்படுகிறது.