தாஜ்மஹாலை பார்வையிட வரும் அனைத்து சுற்றுலா பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் திடீர் எழுச்சி பெற்று பரவி வருகிறது. இதற்கு ஒமைக்ரானின் பிஎப்.7 துணை வைரஸ்கள் காரணமாக உள்ளது. இந்த வைரஸ் அதிவேகமாக பரவுகிற தன்மையைக் கொண்டுள்ளது. இந்த வைரஸ் சீனாவில் மட்டுமின்றி அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ், டென்மார்க் ஆகிய நாடுகளிலும் பரவி விட்டது. குஜராத்தில் கடந்த அக்டோபர் மாதம் 2 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை குஜராத் உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் கண்டறிந்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 3 பேரை இந்த வைரஸ் பாதித்துள்ளதாக அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கையாக தாஜ்மஹாலை பார்வையிட வரும் அனைத்து சுற்றுலா பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம் என ஆக்ரோ மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.














