கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலர், மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும். கொரோனா பரிசோதனையின் எண்ணிக்கை, ஒப்பிட்டு அளவில் திருப்திகரமாக இல்லை என்று கூறியுள்ளார்.
தமிழ்நாடு, கர்நாடகா, மராட்டியம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது. குறிப்பிட்ட சில மாநிலங்களில் கொரோனா பாதித்தவர்களுக்கு சுவாச பிரச்சனை பாதிப்பு அதிகம் உள்ளது. கொரோனா வழிகாட்டுதல்களை மக்கள் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.














