மூடா முறைகேடு வழக்கில் மைசூரு லோக் ஆயுக்தா அலுவலகத்தில் முதல்வர் சித்தராமையாவின் விசாரணை இன்று நடைபெற்றது.
முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான 3.16 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மைசூரு மாநகர வளர்ச்சிக் குழுமம் (மூடா) அந்த நிலத்திற்கு பதிலாக 14 புதிய மனைகளைக் கொடுத்தது. இந்த நிலம் நகரின் முக்கியமான மற்றும் ஆடம்பர பகுதிகளில் அமைந்ததால், அது அரசுக்கு ஒரு பொருளாதார இழப்பை ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.இந்த முறைகேடு தொடர்பாக 3 பேர் அளித்த புகாரின் பேரில், மைசூரு லோக் ஆயுக்தா போலீசாரின் தலைமையில் சித்தராமையா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முதன்மை குற்றவாளியாக சித்தராமையா, அவரது மனைவி பார்வதி, மைத்துனர் மல்லிகார்ஜூன சுவாமி மற்றும் தேவராஜன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், சித்தராமையா மைசூரு லோக் ஆயுக்தா அலுவலகத்தில் இன்று விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது. அதடைப்படையில் இன்று காலை சித்தராமையா மைசூர் லோக் ஆயுக்தா அலுவலகத்தில் ஆஜர் ஆனார்.