இரண்டு கேலக்ஸிகள் இணையும் புகைப்படம் - ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி பகிர்வு

விண்வெளியில் நிகழும் பல்வேறு ஆச்சரிய நிகழ்வுகளை ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி புகைப்படம் எடுத்து அனுப்பி வருகிறது. அந்த வகையில், சுமார் 326 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் 2 கேலக்ஸிகள் இணையும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளது. “விண்வெளியில் நிகழும் நடனம்” என்ற பெயரில் விஞ்ஞானிகள் இதை கொண்டாடி வருகின்றனர். ஹைட்ரா என்ற விண்மீன் கூட்டத்தில் லட்சக்கணக்கான விண்மீன்களை உள்ளடக்கிய 2 கேலக்ஸிகள் இணையும் செயல்பாடு நிகழ்ந்து வருகிறது. பென்குயின் மற்றும் அதன் முட்டை என இந்த 2 […]

விண்வெளியில் நிகழும் பல்வேறு ஆச்சரிய நிகழ்வுகளை ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி புகைப்படம் எடுத்து அனுப்பி வருகிறது. அந்த வகையில், சுமார் 326 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் 2 கேலக்ஸிகள் இணையும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளது. “விண்வெளியில் நிகழும் நடனம்” என்ற பெயரில் விஞ்ஞானிகள் இதை கொண்டாடி வருகின்றனர்.

ஹைட்ரா என்ற விண்மீன் கூட்டத்தில் லட்சக்கணக்கான விண்மீன்களை உள்ளடக்கிய 2 கேலக்ஸிகள் இணையும் செயல்பாடு நிகழ்ந்து வருகிறது. பென்குயின் மற்றும் அதன் முட்டை என இந்த 2 கேலக்ஸிகளும் விஞ்ஞானிகளால் புனை பெயரிட்டு அழைக்கப்படுகிறது. ஏனெனில், ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி வழியாக பார்க்கும் போது அவற்றின் வடிவம் இறக்கை இல்லாத பறவை மற்றும் முட்டை என்பது போல காட்சியளிக்கிறது. இந்த கேலக்சிகள் இரண்டும் சேர்த்து ARP 142 என்ற பெயரில் அறிவியல் ரீதியாக அழைக்கப்படுகிறது. சுமார் 25 முதல் 75 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இந்த இரு கேலக்சிகளின் இணையும் செயல்பாடு தொடங்கியதாகவும், தற்போதிலிருந்து நூற்றுக்கணக்கான மில்லியன் ஆண்டுகளுக்கு பிறகு இவை ஒற்றை கேலக்ஸியாக மாறும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu