கூகுள் நிறுவனத்தில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுகின்றனர். செலவுகளை குறைக்கும் நடவடிக்கை காரணமாக இந்த பணி நீக்கம் மேற்கொள்ளப்படுவதாக கூகுள் தெரிவித்துள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு, கூகுள் நிறுவனத்தில் 12000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவர் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது, நூற்றுக்கணக்கான ஊழியர்கள் நீக்கப்பட உள்ளதாக அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, ஹார்டுவேர், சப்போர்ட், பிக்சல் போன் துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. நிறுவனத்தின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்பின் பகுதியாக இந்த பணி நீக்கம் இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது. நிகழும் 2024 ஆம் ஆண்டில், அமேசான் நிறுவனம் ஏற்கனவே பணிநீக்கத்தை தொடங்கியுள்ள நிலையில், கூகுள் நிறுவனம் இணைந்துள்ளது. மேலும், பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் பணி நீக்கத்தை அறிவிக்கலாம் என அஞ்சப்படுகிறது.














