அமெரிக்க குடியேற்ற கட்டணங்கள் உயர்வு

January 6, 2023

அமெரிக்காவில் குடியேறுவதற்கான கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக, எச் 1 பி விசா மூலம் பணிக்காக செல்வோருக்கு குடியேற்ற கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது, 10 டாலர்களாக உள்ள எச் 1 பி விசா முன்பதிவு கட்டணம் 2050% உயர்ந்து, 215 டாலர்களாக உயர்த்தப்படுகிறது. மேலும், எச் 1 பிரிவுக்கு, விசா கட்டணத்தில் 70% உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, 460 டாலர்களில் இருந்து 780 டாலர்களாக கட்டணம் உயர்கிறது. மேலும், ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறுவதற்கான […]

அமெரிக்காவில் குடியேறுவதற்கான கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக, எச் 1 பி விசா மூலம் பணிக்காக செல்வோருக்கு குடியேற்ற கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.

தற்போது, 10 டாலர்களாக உள்ள எச் 1 பி விசா முன்பதிவு கட்டணம் 2050% உயர்ந்து, 215 டாலர்களாக உயர்த்தப்படுகிறது. மேலும், எச் 1 பிரிவுக்கு, விசா கட்டணத்தில் 70% உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, 460 டாலர்களில் இருந்து 780 டாலர்களாக கட்டணம் உயர்கிறது. மேலும், ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறுவதற்கான எல் விசா கட்டணம், 201% உயர்த்தப்படுகிறது. எனவே, 460 டாலர்களில் இருந்து 1385 டாலர்களாக கட்டணம் உயர்கிறது. மேலும், பல திறன் சார்ந்த பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஓ வகை விசாக்களுக்கு 129% கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

மில்லினியர் விசா என்று அழைக்கப்படும் தொழில் முனைவோருக்கான ஈபி 5 விசா கட்டணமும் 204% உயர்ந்து, 3675 டாலர்களிலிருந்து 11160 டாலர்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற பிரிவின் தரவுகளில் அடிப்படையில், 75% விசாக்கள் இந்தியர்களால் பெறப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. எனவே, இந்த கட்டண உயர்வு, அமெரிக்காவில் குடிப்பெயர உள்ள இந்தியர்களை பாதிக்கும் என கருதப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu