இந்தியாவின் இருமல் மருந்து காரணமாக காம்பியாவில் 66 பேர் உயிரிழப்பு - உலகச் சுகாதார மையம் எச்சரிக்கை

இந்தியாவைச் சேர்ந்த மெய்டன் பார்மசூட்டிக்கல்ஸ் லிமிடெட் (Maiden Pharmaceuticals Limited) என்ற ஹரியானா மருந்து நிறுவனம் தயாரித்த இருமல் மருந்துகளை உட் கொண்டதன் காரணமாக, உயிரிழப்புகள் நேர்ந்துள்ளதாக உலகச் சுகாதார மையம் எச்சரித்துள்ளது. “காம்பியா நாட்டில், தீவிர சிறுநீரகப் பாதிப்புகள் மற்றும் 66 உயிரிழப்புகள் இந்த நிறுவனத்தின் இருமல் மருந்து மூலம் ஏற்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன், காம்பியா நாட்டில் இந்த நிறுவனத்தின் மருந்துகள் கெட்டுப்போன தன்மையில் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது போலவே, உலகின் பிற நாடுகளுக்கு […]

இந்தியாவைச் சேர்ந்த மெய்டன் பார்மசூட்டிக்கல்ஸ் லிமிடெட் (Maiden Pharmaceuticals Limited) என்ற ஹரியானா மருந்து நிறுவனம் தயாரித்த இருமல் மருந்துகளை உட் கொண்டதன் காரணமாக, உயிரிழப்புகள் நேர்ந்துள்ளதாக உலகச் சுகாதார மையம் எச்சரித்துள்ளது. “காம்பியா நாட்டில், தீவிர சிறுநீரகப் பாதிப்புகள் மற்றும் 66 உயிரிழப்புகள் இந்த நிறுவனத்தின் இருமல் மருந்து மூலம் ஏற்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன், காம்பியா நாட்டில் இந்த நிறுவனத்தின் மருந்துகள் கெட்டுப்போன தன்மையில் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது போலவே, உலகின் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட மருந்துகளும் உட்கொள்ள தக்க நிலையில் இல்லாமல் இருக்கலாம். எனவே, உலக நாடுகள், உடனடியாக மருந்துகளைப் பரிசோதனை செய்ய வேண்டுகிறோம்” என்று உலகச் சுகாதார மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மெய்டன் பார்மசூட்டிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் Promethazine Oral Solution, Kofexmalin Baby Cough Syrup, Makoff Baby Cough Syrup மற்றும் Magrip N Cold Syrup ஆகிய இருமல் மருந்துகள் கெட்டுப் போன நிலையில் இருந்தது காம்பியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியை வெளியிட்ட உலகச் சுகாதார மையம், இந்த மருந்துகளின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்த எந்தவித உறுதியையும் மெய்டன் மருந்து நிறுவனம் உலகச் சுகாதார மையத்திற்கு இதுவரை வழங்கவில்லை என்ற எச்சரிக்கையையும் விடுத்துள்ளது. மேலும், “இந்த மருந்துகளில் அளவுக்கு அதிகமாக டை எத்திலீன் கிளைக்கால் மற்றும் எத்திலீன் கிளைக்கால் (diethylene glycol and ethylene glycol) போன்றவை இருந்துள்ளன. இதன் காரணமாகவே மருந்து கெட்டுப் போன தன்மையில் இருந்துள்ளது. அத்துடன், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி உள்ளது” என்று தெரிவித்துள்ளது.

எத்திலீன் கிளைக்கால் என்பது மனிதர்களுக்கு கேடு விளைவிக்கும் பொருளாகும். குறிப்பாக, வயிற்று வலி, வாந்தி, பேதி, சிறுநீர் கழிக்க முடியா நிலை, தலைவலி போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடியது. அத்துடன், தீவிர சிறுநீரகப் பாதிப்புகளை உண்டாக்கி, இறுதியாக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய உலகச் சுகாதார மையத்தின் பொது நிர்வாகி டெட்ராஸ் அதனோம் (Tedros Adhanom Ghebreyesus), இது தொடர்பாக இந்திய மருந்து நிறுவனத்துடன் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருவதாகக் கூறினார். அத்துடன், குழந்தைகளை மற்றும் குடும்பத்தினரை இழந்துள்ள காம்பியா நாட்டு மக்களுக்கு இது ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu