கனடா மற்றும் மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவுக்குள் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% வரி விதிப்பது பற்றி டிரம்ப் அறிவித்துள்ளார்.
தனது சமூக வலைதள பக்கத்தில், "மெக்சிகோ மற்றும் கனடா வழியாக அமெரிக்காவிற்குள் ஆயிரக்கணக்கான மக்கள் நுழைகின்றனர். இதனால் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் பழக்கங்கள் அதிகரித்துள்ளன. தற்போது, அமெரிக்க எல்லையில் மெக்சிகோவில் இருந்து வரும் மக்கள் தடுக்கப்படவில்லை" என அவர் தெரிவித்துள்ளார். ஜனவரி 20-ம் தேதியுடன், மெக்சிகோ மற்றும் கனடாவிலிருந்து வரும் அனைத்துப் பொருட்களுக்கு 25% வரி விதிப்பதற்கான உத்தரவை கையெழுத்திடுவேன் என அவர் கூறியுள்ளார். சட்டவிரோத குடியேற்றம் தடுக்கப்பட்டு, இந்த பிரச்சினை தீர்ந்த பிறகு மட்டுமே இந்த உத்தரவு அமலில் இருக்கும்.














