ஈரோடு கிழக்கில் நாளை வாக்கு எண்ணிக்கை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடைபெற்றது. 77 வேட்பாளர்கள் போட்டியிட்டதால் 5 வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. இதைத்தொடர்ந்து நாளை காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணிக்கை தொடங்க உள்ளது. இதற்காக இரண்டு அறைகளில் 16 மேஜைகள் போடப்பட்டுள்ளன. 15 சுற்றுகள் வரை வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும். முதலில் தபால் வாக்குகள் பிரித்து எண்ணப்படும். பின்னர் […]

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடைபெற்றது. 77 வேட்பாளர்கள் போட்டியிட்டதால் 5 வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. இதைத்தொடர்ந்து நாளை காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணிக்கை தொடங்க உள்ளது. இதற்காக இரண்டு அறைகளில் 16 மேஜைகள் போடப்பட்டுள்ளன. 15 சுற்றுகள் வரை வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும். முதலில் தபால் வாக்குகள் பிரித்து எண்ணப்படும். பின்னர் அரை மணி நேரம் கழித்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் பிரித்து எண்ணப்படும் என மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான கிருஷ்ணன் உன்னி தெரிவித்தார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu