2024 ஏப்ரலில் நாட்டின் முதல் 8-வழி விரைவு சாலை தயாராகிவிடும் -  அமைச்சர் நிதின் கட்கரி 

நாட்டின் முதல் 8-வழி விரைவு சாலை, துவாரகா அடுத்தாண்டு ஏப்ரலில் தயாராகிவிடும் என மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். இதுகுறித்து மத்திய அமைச்சர் நிதின்கட்கரி கூறுகையில், நாட்டின் முதல் 8 வழி விரைவு சாலை ரூ.9,000 கோடி செலவில் கட்டப்படுகிறது. 34 மீட்டர் அகலம் உள்ள இந்த விரைவுச் சாலை ஒரு தூண் பாலத்தில் அமைக்கப்படுகிறது. இந்த விரைவுச் சாலை ஹரியானாவில் 18.9 கி.மீ தூரத்துக்கும், டெல்லியில் 10.1 கி.மீ தூரத்துக்கும் அமைக்கப்படுகிறது. […]

நாட்டின் முதல் 8-வழி விரைவு சாலை, துவாரகா அடுத்தாண்டு ஏப்ரலில் தயாராகிவிடும் என மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

இதுகுறித்து மத்திய அமைச்சர் நிதின்கட்கரி கூறுகையில், நாட்டின் முதல் 8 வழி விரைவு சாலை ரூ.9,000 கோடி செலவில் கட்டப்படுகிறது. 34 மீட்டர் அகலம் உள்ள இந்த விரைவுச் சாலை ஒரு தூண் பாலத்தில் அமைக்கப்படுகிறது. இந்த விரைவுச் சாலை ஹரியானாவில் 18.9 கி.மீ தூரத்துக்கும், டெல்லியில் 10.1 கி.மீ தூரத்துக்கும் அமைக்கப்படுகிறது. இந்தப் பணி அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் நிறைவு செய்யப்படும். விரைவுச் சாலையில் ஐடிஎஸ் (Intelligent Transport System) எனப்படும் நவீன வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன.

டெல்லி- குருகிராம் இடையே போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக இந்த விரைவுச் சாலை அமைக்கப்படுகிறது. இத்திட்டத்துக்காக நாட்டில் முதல் முறையாக விரைவுச்சாலை வழித்தடத்தில் இருந்த 12,000 மரங்கள் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu