இம்ரான் கானை 8 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

May 11, 2023

முன்னாள் பிரதமர் இம்ரான் கானை 8 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் ஆஜராக வந்தபோது ரேஞ்சர் படையினர் அவரை கைது செய்தனர். இதையடுத்து இரவு முழுவதும் ரகசிய இடத்தில் வைத்து அவரிடம் என்ஏபி அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அவர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ஊழல் வழக்கு தொடர்பாக அவரிடம் மேலும் விரிவாக விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் […]

முன்னாள் பிரதமர் இம்ரான் கானை 8 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் ஆஜராக வந்தபோது ரேஞ்சர் படையினர் அவரை கைது செய்தனர். இதையடுத்து இரவு முழுவதும் ரகசிய இடத்தில் வைத்து அவரிடம் என்ஏபி அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அவர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ஊழல் வழக்கு தொடர்பாக அவரிடம் மேலும் விரிவாக விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் 10 நாட்கள் காவலில் வைக்க என்ஏபி அனுமதி கோரியது. அதனை ஏற்க மறுத்த நீதிமன்றம், இம்ரான் கானை 8 நாட்கள் மட்டும் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளது.

இம்ரான் கான் கைது செய்யப்பட்டுள்ளதையடுத்து, பாகிஸ்தான் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. மேலும் மாணவர்களுக்கான இறுதி தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், நாடு முழுவதும் பள்ளிகளை மூடவும் பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu