செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி

செந்தில் பாலாஜியை 8 நாள் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. கடந்த 13-ந் தேதி சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். தற்போது அவர் சென்னை காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். கைதான செந்தில்பாலாஜியை வருகிற 28-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் செந்தில் பாலாஜி தரப்பில் […]

செந்தில் பாலாஜியை 8 நாள் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.

கடந்த 13-ந் தேதி சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். தற்போது அவர் சென்னை காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். கைதான செந்தில்பாலாஜியை வருகிற 28-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் கேட்டு வழக்கு தொடரப்பட்டது. ஆனால் நீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளது. மேலும் நேற்று முதல் வருகிற 23-ந் தேதி வரை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும் அவரது சிகிச்சைக்கு பாதிப்பின்றி மருத்துவமனையிலேயே வைத்து விசாரிக்க அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu