அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜனவரி 4 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்க துறையினரால் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜூன் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். பின்னர் அவருக்கு ஏற்பட்ட திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செந்தில் பாலாஜி புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். இவரது நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடையும் நிலையில் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. பின்னர் இன்று காணொலி காட்சி மூலமாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி முன்பு செந்தில் பாலாஜி ஆஜர் ஆனதை தொடர்ந்து இவரது நீதிமன்ற காவல் ஜனவரி 4 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.