முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 47 வது முறையாக மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டவழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவ்வழக்கு தொடர்பாக வங்கியின் கணக்கு தொடர்பாக ஆவணங்களை கேட்டு அமலாக்கத்துறை வங்கிக்கு அனுப்பிய கடிதத்தை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்திருந்தார்.இதனை ஏற்ற நீதிமன்றம் அமலாக்கத்துறைக்கு ஆவணங்களை வழங்க உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் படுத்தும் படி சிறைத்துறைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் இன்று செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். பின்னர் வங்கி சம்பந்தப்பட்ட ஆவணங்கள் வழங்கப்பட்டது. மேலும் வழக்கின் விசாரணை ஜூலை 18 ஆம் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இன்றுடன் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில் இவரது நீதிமன்ற காவல் 47-வது முறையாக மீண்டும் நீடித்து ஜூலை 18-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.