'நாட்டின் தலைவிதியை மாற்றும் திறன் நீதிமன்றத்திற்கு உள்ளது': உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி

காரைக்கால் நீதிமன்றம் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை போல் காட்சி அளிக்கிறது என்று சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா கூறினார். புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட இரண்டு குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள் நேற்று திறக்கப்பட்டன. இவ்விழாவில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜா பேசுகையில், காரைக்கால் நீதிமன்ற வளாகத்திற்குள் சென்றது, அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வளாகத்திற்குள் நுழைந்தது போல் உள்ளது. இவ்வடிவமைப்பு போல் மற்ற நீதிமன்றங்களிலும் பின்பற்றினால் […]

காரைக்கால் நீதிமன்றம் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை போல் காட்சி அளிக்கிறது என்று சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா கூறினார்.

புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட இரண்டு குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள் நேற்று திறக்கப்பட்டன. இவ்விழாவில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜா பேசுகையில், காரைக்கால் நீதிமன்ற வளாகத்திற்குள் சென்றது, அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வளாகத்திற்குள் நுழைந்தது போல் உள்ளது. இவ்வடிவமைப்பு போல் மற்ற நீதிமன்றங்களிலும் பின்பற்றினால் நீதிமன்றங்களுக்கு பெருமை என்றார்.

வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களை வழக்குகள் சம்பந்தமாக மட்டும் பயன்படுத்தாமல், ஒரு மனிதனின் தலைவிதியை மாற்றும் விதத்தில் நீதிமன்றம் செயல்படுவதாக தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு நாட்டின் தலைவிதியை மாற்றும் திறனும், ஒரு மாநிலத்தின் தலைமையை மாற்றும் வல்லமையும் நீதிமன்றத்திற்கு உள்ளது. எனவே வழக்கறிஞர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று கூறினார்.

மேலும், கொரோனா காலங்களில் அனைத்து நீதிமன்றங்களிலும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அனைத்து நீதிமன்றங்களிலும் வீடியோ கான்பரன்சிங், நீதிமன்ற கோப்புகளை மின்னணு முறையில் தாக்கல் செய்தல், நேரடி விவாதம் போன்றவை விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்காக வழக்கறிஞர்கள் தங்களை தயார் செய்து கொள்ள வேண்டும். இதனால் சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் நேரம், பணச்செலவு குறையும். தேர்தல் இலவச வாக்குறுதி கட்சிகளிடம் கருத்து கேட்டு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது என்று தலைமை நீதிபதி பேசினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu