சீன கட்டுமான நிறுவனத்திற்கு ஹாங்காங் நீதிமன்றம் தடை

January 29, 2024

சீன கட்டுமான நிறுவனத்திற்கு ஹாங்காங் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. சீனாவின் மிகப்பெரிய கட்டுமான நிறுவனம் எவர்கிராண்டே. உலக அளவில் வணிக வளாகங்களை கட்டி விற்பனை செய்து வருகிறது இந்த நிறுவனம். பொருளாதார வீழ்ச்சி காரணமாக சீனாவில் வீடுகள் விற்பனை பெருமளவு குறைந்துள்ளது. இதனால் இந்த நிறுவனத்தின் வருவாயில் குறைவு ஏற்பட்டுள்ளது. எவர்கிராண்டே நிறுவனத்திற்கு 300 பில்லியன் டாலர்கள் மதிப்பில் கடன் உள்ளது. இதன் சொத்துக்கள் 240 பில்லியன் டாலர்கள் ஆகும். இந்நிலையில் 2022ல் டாப் சைன் குளோபல் […]

சீன கட்டுமான நிறுவனத்திற்கு ஹாங்காங் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

சீனாவின் மிகப்பெரிய கட்டுமான நிறுவனம் எவர்கிராண்டே. உலக அளவில் வணிக வளாகங்களை கட்டி விற்பனை செய்து வருகிறது இந்த நிறுவனம். பொருளாதார வீழ்ச்சி காரணமாக சீனாவில் வீடுகள் விற்பனை பெருமளவு குறைந்துள்ளது. இதனால் இந்த நிறுவனத்தின் வருவாயில் குறைவு ஏற்பட்டுள்ளது.

எவர்கிராண்டே நிறுவனத்திற்கு 300 பில்லியன் டாலர்கள் மதிப்பில் கடன் உள்ளது. இதன் சொத்துக்கள் 240 பில்லியன் டாலர்கள் ஆகும். இந்நிலையில் 2022ல் டாப் சைன் குளோபல் எனும் நிறுவனம் ஹாங்காங் நீதிமன்றத்தில் மனு அளித்தது. அதன் மீதான விசாரணை அடிப்படையில் எவர்கிராண்டே நிறுவனத்தை மூடி அதன் சொத்துக்களை முடக்கியது. நீதிமன்றம் அதோடு கடனை ஈடுகட்ட நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து ஹாங்காங் பங்கு சந்தையில் எவர்கிராண்டே வர்த்தகம் செய்வது நிறுத்தப்பட்டது. இந்தத் தீர்ப்பின் தாக்கம் சீன பொருளாதாரத்தில் கடுமையாக இருக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu