எச். ராஜா மீதான வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு

April 30, 2024

பெண்களுக்கு எதிரான ஆபாச கருத்து தெரிவித்ததாக எச். ராஜா மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. பாஜக நிர்வாகி எச். ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்களுக்கு எதிராக ஆபாச கருத்து தெரிவித்ததாக புகார்கள் எழுந்தது. இதனை அடுத்து ஈரோடு டவுன் காவல்துறை இவர் மீது வழக்கு பதிவு செய்தது. எச்.ராஜா விற்கு எதிரான வழக்கு ஈரோடு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில் சென்னை சிறப்பு நீதிமன்றத்திற்கு இவ்வழக்கு மாற்றப்பட்டது. […]

பெண்களுக்கு எதிரான ஆபாச கருத்து தெரிவித்ததாக எச். ராஜா மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.

பாஜக நிர்வாகி எச். ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்களுக்கு எதிராக ஆபாச கருத்து தெரிவித்ததாக புகார்கள் எழுந்தது. இதனை அடுத்து ஈரோடு டவுன் காவல்துறை இவர் மீது வழக்கு பதிவு செய்தது. எச்.ராஜா விற்கு எதிரான வழக்கு ஈரோடு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில் சென்னை சிறப்பு நீதிமன்றத்திற்கு இவ்வழக்கு மாற்றப்பட்டது. இதனை ரத்து செய்ய கோரி எச். ராஜா தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இதனை மூன்று மாதங்களுக்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது. தற்போது மீண்டும் தனக்கு எதிரான வழக்கு ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எச் ராஜா மனு தாக்கல் செய்துள்ளார். இதன் விசாரணையில் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்கள் தானா? என கேட்ட கேள்விக்கு, எச்.ராஜா தரப்பு ஆம் என்று பதில் அளித்தது.அதனை தொடர்ந்து வழக்கை ரத்து செய்ய மறுத்து அவரது மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu