கேரள மாநிலம் களம சேரியில் நடைபெற்ற குண்டு வெடிப்பின் காரணமாக கைது செய்யப்பட்ட டொமினிக் மார்ட்டினுக்கு மார்ச் 29ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 29ஆம் தேதி கேரளா மாநிலம் கொச்சி களமசேரியில் கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது. இதில் திடீரென்ற ஏற்பட்ட குண்டுவெடிப்பில் பெண்கள் மற்றும் சிறுமி உட்பட ஐந்து பேர் பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பாக கேரளா கொச்சியை சேர்ந்த டொமினிக் மார்ட்டின் என்பவர் கைது செய்யப்பட்டு குண்டு வெடிப்பு சதியின் பின்னணி குறித்து என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும் போலீசார் இவரை காவலில் எடுத்தும் விசாரணை நடத்தி வந்தனர். போலீஸ் காவல் முடிவடைந்தது நிலையில் மார்ச் 29 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வைக்க உத்தரவிடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.














