சபரிமலை கோவிலில் பூக்கள் மற்றும் அலங்காரத்தை பற்றிய ஐகோர்ட்டின் உத்தரவு

November 26, 2024

சபரிமலை கோவிலில் ஆர்க்கிட் மலர்கள் மற்றும் இலைகளைக் கொண்ட அலங்காரம் பயன்படுத்துவது தடை விதிக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்ட நாளில் இருந்து பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவர்களது வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகளை தேவசம் போர்டு செய்து வருகிறது. இந்த நிலையில், சபரிமலை சன்னிதானத்தில் ஆர்க்கிட் மலர்கள் மற்றும் இலைகளை அலங்காரத்திற்கு பயன்படுத்தக் கூடாது என்று தேவசம் போர்டுக்கு ஐகோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது. பாரம்பரிய வழக்கப்படி பூக்களை மட்டுமே […]

சபரிமலை கோவிலில் ஆர்க்கிட் மலர்கள் மற்றும் இலைகளைக் கொண்ட அலங்காரம் பயன்படுத்துவது தடை விதிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்ட நாளில் இருந்து பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவர்களது வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகளை தேவசம் போர்டு செய்து வருகிறது. இந்த நிலையில், சபரிமலை சன்னிதானத்தில் ஆர்க்கிட் மலர்கள் மற்றும் இலைகளை அலங்காரத்திற்கு பயன்படுத்தக் கூடாது என்று தேவசம் போர்டுக்கு ஐகோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது. பாரம்பரிய வழக்கப்படி பூக்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அவற்றை தினமும் மாற்ற வேண்டும் என்றும் நீதிபதிகள் அனில் கே.நரேந்திரன், எஸ்.முரளி கிருஷ்ணா ஆகியோர் உத்தரவு வழங்கினர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu