2023 ஆம் ஆண்டில், கொரோனா உயிரிழப்புகள் 95% குறைந்துள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. அதே வேளையில், “கொரோனா ஆபத்து முழுமையாக நீங்க வில்லை; எக்ஸ் பிபி 1.16 வகை கொரோனா பாதிப்பு பரவலாக உலக நாடுகளில் நிலவி வருகிறது” என கூறியுள்ளது.
உலக சுகாதார மையத்தில், கொரோனா பாதிப்புக்கான தொழில்நுட்ப தலைவர் மரியா வான் கேர்கோவ், “எஸ்பிபி வகையை சார்ந்த கொரோனா வைரஸ் உலக நாடுகளில் பரவி வருகிறது. உலக நாடுகள் கொரோனாவை எதிர்த்து தொடர்ச்சியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார். உலக சுகாதார மையத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கேப்ரியாசெஸ், "கடந்த ஒரு மாதத்தில் 14000 பேர் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர். முந்தைய ஆண்டை விட இது குறைவு தான் என்றாலும், ஆபத்து முழுமையாக நீங்கவில்லை. மேலும், கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறி வருவதால், புதிய அலைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு" என்று எச்சரித்துள்ளார்.














