கார்டுகள், வேலட்டுகள் இல்லாத புதிய கட்டண முறை அறிமுகம் - கிரெட் அறிவிப்பு

February 28, 2023

பிரபல நிதி பரிவர்த்தனை தளமான கிரெட் (CRED), ஏற்கனவே, இணைய வழி அல்லாத கட்டண முறை குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தது. தற்போது, அதன்படி, 'Tap to Pay' என்ற பெயரில், புதிய கட்டண முறையை அறிமுகம் செய்துள்ளது. இந்த முறையில், வாடிக்கையாளர்கள் தங்களது டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகள், வேலட்டுகள் போன்றவற்றை பயன்படுத்த தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரெட் தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள ஆண்ட்ராய்டு கைபேசிகள் மற்றும் கார்டுகளின் விவரங்களைக் கொண்டு, நேரடியாக கட்டணம் செலுத்த முடியும் […]

பிரபல நிதி பரிவர்த்தனை தளமான கிரெட் (CRED), ஏற்கனவே, இணைய வழி அல்லாத கட்டண முறை குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தது. தற்போது, அதன்படி, 'Tap to Pay' என்ற பெயரில், புதிய கட்டண முறையை அறிமுகம் செய்துள்ளது. இந்த முறையில், வாடிக்கையாளர்கள் தங்களது டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகள், வேலட்டுகள் போன்றவற்றை பயன்படுத்த தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரெட் தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள ஆண்ட்ராய்டு கைபேசிகள் மற்றும் கார்டுகளின் விவரங்களைக் கொண்டு, நேரடியாக கட்டணம் செலுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைகள் அல்லது வர்த்தக மையங்களில் உள்ள கருவிகளில், ஒரே ஒரு பட்டன் மூலம் பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம் என்று விவரிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, இது போன்ற கட்டண முறையை பேடிஎம் நிறுவனம் செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த கட்டண முறை மிகவும் பாதுகாப்பானதாகச் சொல்லப்படுகிறது. இந்த அறிவிப்புடன் இணைந்து, கிரெட் நிறுவனத்தின் 'கிரெட் பிளாஷ்' என்ற கட்டண சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது 'பை நவ் பே லேட்டர்' அடிப்படையிலான கட்டண முறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரெட் நிதி நிறுவனம், பல்வேறு வர்த்தக நிறுவனங்களுடன் இணைந்து பரிவர்த்தனை சேவையை விரிவு செய்துள்ளது. குறிப்பாக, ஸ்விக்கி, செப்டோ, அர்பன் கம்பெனி, லிசியஸ், டன்சோ போன்ற நிறுவனங்களில் கிரெட் சேவை வழங்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu