2028 ஒலிம்பிக்கில் 128 ஆண்டுகளுக்கு பிறகு கிரிக்கெட் போட்டி சேர்க்கப்பட்டுள்ளது.
2028-ம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறும் ஒலிம்பிக்கில், 128 ஆண்டுகளுக்கு பிறகு கிரிக்கெட் போட்டி சேர்க்கப்பட்டுள்ளது. கடைசியாக 1900-ம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம்பெற்றது.இந்த முறை 20 ஓவர் போட்டியாக (ஆண்கள், பெண்கள் பிரிவில்) கிரிக்கெட் இடம்பெற உள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் 6 அணிகள் பங்கேற்கும் என்றும், ஒவ்வொரு அணியிலும் 15 வீரர்கள் உள்ளடக்கப்படுவர் எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஐ.சி.சி-யின் முழுநேர உறுப்பினர் நாடுகள் 12 ஆகவும், அசோசியேட் உறுப்பினர் நாடுகள் 94 ஆகவும் உள்ளன. தகுதி சுற்று மூலம் மட்டுமே இந்த 6 அணிகள் தேர்வு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.