உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டிக்கான பலப்பரீட்சை நாளை இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையே நடைபெற உள்ளது.
கடந்த மாதம் 5 ஆம் தேதி 13வது ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கியது. இதில் பத்து நாடுகள் பங்கேற்று பல்வேறு நகரங்களில் இந்தியா முழுவதும் லீக் ஆட்டங்கள் நடைபெற்றது. இதில் நேற்று முன்தினத்துடன் லீக் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகள் முதல் நான்கு இடங்களை பிடித்து அரை இறுதிக்கு முன்னேறி உள்ளன.
இதனை அடுத்து அரைஇறுதி போட்டி நாளை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இதுவரை இந்திய அணி தொடர்ந்து ஒன்பது முறைகளும் வெற்றி பெற்றுள்ள நிலையில் இறுதி போட்டிக்கு நாளை தயாராகுமா என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இதுவரை எட்டாவது முறையாக அரை இறுதி போட்டியில் இந்தியா விளையாட உள்ளது.














