உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இன்று இங்கிலாந்து - வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தான்-இலங்கை அணிகள் மோதுகின்றன.உலகக்கோப்பை கிரிக்கெட் இமாச்சலப் பிரதேசத்தில் தர்மசாலாவில் ஏழாவது லீக் போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் இங்கிலாந்து - வங்காளதேசம் அணிகள் மோதியது. இதில் வங்காளதேசம் டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்து இங்கிலாந்து அணி முதலில் களம் இறங்கி 364 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 365 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் களம் இறங்கி உள்ளது.அடுத்ததாக பாகிஸ்தான் - இலங்கை அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி ஹைதராபாத்தில் நடைபெறுகிறது. இதன் முதல் போட்டியில் பாகிஸ்தான் நெதர்லாந்தை வீழ்த்தி இருந்தது. அதே உற்சாகத்துடன் இன்று இலங்கையுடன் மோதுகிறது. இலங்கை அணி முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வி அடைந்துள்ளது. இன்றைய போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தும் முயற்சியுடன் இலங்கை அணி விளையாட உள்ளது.