குரோஷியாவின் தலைநகர் சாக்ரெப்பில் நேற்று காலை 9.30 மணியளவில் ஒரு இளைஞர் பள்ளி வளாகத்தில் புகுந்து ஆசிரியர் மற்றும் மாணவர்கள் மீது சரமாரியாக கத்திக்குத்து தாக்குதல் நடத்தினான்.
அதில் ஆசிரியர் மற்றும் 5 மாணவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதலின் போது வீடியோவில் மாணவர்கள் அலறியடித்து ஓடுவது பதிவு செய்யப்பட்டது. இது சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த சம்பவத்தில் 7 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இளைஞரை பிடித்து கைது செய்தனர். தற்போது அவர் மீது விசாரணை நடைபெற்று வருகின்றது.