வங்காளதேசத்தில் அதிபர் மாளிகை முற்றுகை

October 23, 2024

வங்கதேசத்தின் அதிபர் முகமது ஷஹாபுதீன் பதவி விலகக் கோரி, நேற்று இரவு அவரது மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். அதற்குமுன், டாக்காவில் நடந்த பேரணியில், அதிபர் ராஜிநாமா உள்பட 5 கோரிக்கைகளை மாணவர் இயக்கத்தினர் முன்வைத்திருந்தனர். போராட்டக்காரர்கள் மாளிகையை முற்றுகையிட முயன்ற போது, ராணுவத்தினர் அவர்களை தடுக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தடுப்புகளை மீறி முன்னேற முயற்சித்ததில், பாதுகாப்பு படையினருக்கும் மாணவர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு மாணவர், ஹசீனாவின் சர்வாதிகார அரசின் கூட்டாளியான அதிபர் […]

வங்கதேசத்தின் அதிபர் முகமது ஷஹாபுதீன் பதவி விலகக் கோரி, நேற்று இரவு அவரது மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர்.

அதற்குமுன், டாக்காவில் நடந்த பேரணியில், அதிபர் ராஜிநாமா உள்பட 5 கோரிக்கைகளை மாணவர் இயக்கத்தினர் முன்வைத்திருந்தனர். போராட்டக்காரர்கள் மாளிகையை முற்றுகையிட முயன்ற போது, ராணுவத்தினர் அவர்களை தடுக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தடுப்புகளை மீறி முன்னேற முயற்சித்ததில், பாதுகாப்பு படையினருக்கும் மாணவர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு மாணவர், ஹசீனாவின் சர்வாதிகார அரசின் கூட்டாளியான அதிபர் உடனடியாக ராஜிநாமா செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். சட்ட வல்லுநராகப் பணியாற்றிய ஷஹாபுதீன், அவாமி லீக் ஆட்சியின்போது நாட்டின் 16-வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu