பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பெண்களுக்கான சிறப்பு திட்டங்கள்

February 1, 2024

இன்று அறிவிக்கப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான மத்திய இடைக்கால பட்ஜெட்டில் பெண்களுக்கான பல்வேறு சிறப்பு திட்டங்கள் இடம் பெற்றன. பெண்கள் உயர்கல்வி பயில்வது கடந்த 10 ஆண்டுகளில் 28% உயர்ந்து உள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மேலும், பெண்கள் தொழில் தொடங்குவதற்கு 30 கோடி முத்ரா கடன் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அரசாங்கத்தின் வீடு கட்டும் திட்டத்தில் பெண்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு வழங்கப்படுவதாக கூறியுள்ளார். கர்ப்பப்பை புற்றுநோயை தடுப்பதற்கு 9 முதல் 14 வயதுக்குட்பட்ட […]

இன்று அறிவிக்கப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான மத்திய இடைக்கால பட்ஜெட்டில் பெண்களுக்கான பல்வேறு சிறப்பு திட்டங்கள் இடம் பெற்றன.

பெண்கள் உயர்கல்வி பயில்வது கடந்த 10 ஆண்டுகளில் 28% உயர்ந்து உள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மேலும், பெண்கள் தொழில் தொடங்குவதற்கு 30 கோடி முத்ரா கடன் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அரசாங்கத்தின் வீடு கட்டும் திட்டத்தில் பெண்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு வழங்கப்படுவதாக கூறியுள்ளார்.

கர்ப்பப்பை புற்றுநோயை தடுப்பதற்கு 9 முதல் 14 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படும். இந்தியாவில் உள்ள கிராமங்களில் 83 லட்சம் மகளிர் சுய உதவி குழுக்கள் செயல்படுகின்றன. அவற்றில் 9 கோடி பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். கிட்டத்தட்ட ஒரு கோடி பெண்களுக்கு இதன் மூலம் பயன் கிடைத்துள்ளது. - இவ்வாறு தெரிவித்தார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu