கடந்த வெள்ளிக்கிழமை கிரவுட்ஸ்டிரைக் நிறுவனத்தின் மேம்படுத்தல் நடவடிக்கை காரணமாக உலக அளவில் மைக்ரோசாப்ட் மென்பொருள் சேவைகள் முடங்கின. விமான போக்குவரத்து பெருவாரியாக பாதிக்கப்பட்டது. மேலும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பணிகள் முடங்கின. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சேவைகளை பயன்படுத்தி வந்த நிதி நிறுவனங்களின் செயல்பாடுகளும் முடங்கியது. உலக அளவில் ஏற்பட்ட இந்த தாக்கம் காரணமாக கிரவுட்ஸ்ட்ரைக் நிறுவனத்தின் பங்கு மதிப்பு கிட்டத்தட்ட 11% அளவுக்கு சரிந்தது. அதன்படி, 75300 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
கிரவுட்ஸ்ட்ரைக் என்பது சைபர் பாதுகாப்பு சார்ந்த சேவைகளை வழங்கும் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் மேற்கொண்ட பால்கன் சென்சார் மென்பொருள் மேம்படுத்தல், எதிர்பாராத விதமாக தொழில்நுட்ப ரீதியாக தோல்வியடைந்தது. மைக்ரோசாப்ட் சர்வர் முடங்கியதால், உலக அளவில் அனைத்து துறை சார்ந்த பணிகளும் ஸ்தம்பித்தது.














