ரஷ்யாவில் இருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி 9.2% ஆக உயர்வு

February 20, 2023

ஜனவரி மாதத்தில் ரஷ்யாவில் இருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி 9.2% ஆக உயர்ந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதியிலிருந்து உக்ரைன் ரஷ்ய போர் தொடங்கியதிலிருந்து, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து இந்தியா ரூ.35,000 கோடி லாபம் ஈட்டியுள்ளதாக தெரியவந்துள்ளது. வணிகத் துறைத்தரும் புள்ளி விவரங்களின்படி, கடந்த ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரை ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி எட்டு மடங்கு அதிகமாக அதிகரித்து, 11.2 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்நிலையில், […]

ஜனவரி மாதத்தில் ரஷ்யாவில் இருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி 9.2% ஆக உயர்ந்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதியிலிருந்து உக்ரைன் ரஷ்ய போர் தொடங்கியதிலிருந்து, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து இந்தியா ரூ.35,000 கோடி லாபம் ஈட்டியுள்ளதாக தெரியவந்துள்ளது. வணிகத் துறைத்தரும் புள்ளி விவரங்களின்படி, கடந்த ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரை ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி எட்டு மடங்கு அதிகமாக அதிகரித்து, 11.2 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்துள்ளது.

இந்நிலையில், ஜனவரி மாதத்தில் ரஷ்யாவில் இருந்து இந்தியா அதிக அளவில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்துள்ளது. ஜனவரி மாதத்தில் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா நாள் ஒன்றுக்கு 1.4 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்தது. டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜனவரியில் இந்தியா 9.2% அதிகமாக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu