ஆஸ்திரேலியாவில் கொரோனா நான்காவது அலை வேகமாகப் பரவி வருகிறது. குறிப்பாக, ஓமிக்ரோன் எக்ஸ்பிபி வகை கொரோனா தொற்று பரவி வருகிறது இதனால், அங்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஆஸ்திரேலிய சொகுசு கப்பல் ஒன்றில் பயணித்த 800 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கார்னிவல் ஆஸ்திரேலியா என்ற நிறுவனத்துக்கு சொந்தமான மெஜஸ்டிக் பிரின்சஸ் என்ற சொகுசு கப்பலில், கொரோனா தொற்று கண்டறியப்பட்ட பின்னர், அது சிட்னி அருகே நிறுத்தப்பட்டுள்ளது. கப்பலில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவக் குழு மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு இல்லாதவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.