கிரையோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றி - இஸ்ரோ பெருமிதம்

February 22, 2024

நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் இஸ்ரோ வளாகத்தில் கிரையோஜெனிக் என்ஜின் சோதனை இஸ்ரோவால் நடத்தப்பட்டது. இந்திய விண்வெளி ஆய்வாளர்கள் விண்வெளி ஆய்வுக்காக வருகிற 2025 ஆம் ஆண்டு ககன்யன் திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு அனுப்பப்பட உள்ளனர். இவர்கள் செல்லும் ராக்கெட்களுக்கான சோதனை பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில் நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் இஸ்ரோ வளாகத்தில் கிரியோஜினிக் என்ஜின் சோதனை நேற்று நடைபெற்றது. இந்த என்ஜின் சோதனை ஏழாவது முறையாக நடத்தப்பட்டது. இதில் இன்ஜின் சகிப்புத்தன்மை, சோதனைகள் செயல்திறன், […]

நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் இஸ்ரோ வளாகத்தில் கிரையோஜெனிக் என்ஜின் சோதனை இஸ்ரோவால் நடத்தப்பட்டது.

இந்திய விண்வெளி ஆய்வாளர்கள் விண்வெளி ஆய்வுக்காக வருகிற 2025 ஆம் ஆண்டு ககன்யன் திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு அனுப்பப்பட உள்ளனர். இவர்கள் செல்லும் ராக்கெட்களுக்கான சோதனை பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில் நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் இஸ்ரோ வளாகத்தில் கிரியோஜினிக் என்ஜின் சோதனை நேற்று நடைபெற்றது. இந்த என்ஜின் சோதனை ஏழாவது முறையாக நடத்தப்பட்டது. இதில் இன்ஜின் சகிப்புத்தன்மை, சோதனைகள் செயல்திறன், மதிப்பீடு கலவை, விகிதம் மற்றும் உந்து சக்தி தொட்டி அழுத்தம் ஆகிய சோதனைகள் செய்யப்பட்டன. இதே போன்ற சோதனை கடந்த ஆண்டு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. ககன்யான் பணியின் வளர்ச்சியை நோக்கிய ஒரு பெரிய நகர்வில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இந்திய விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் கிரையோஜெனிக் என்ஜின் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது பெருமையாக உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu