கடலூர் ரெயில்வே விபத்தில் மூன்று மாணவர்கள் உயிரிழந்த கோர விபத்து மாநிலம் முழுவதும் அதிர்வலை ஏற்படுத்தியது. மொழி புரிதல் குறைவே காரணம் எனக் கூறிய மக்கள் கோபம் தெரிவித்த நிலையில், ரெயில்வே நிர்வாகம் தமிழரை நியமித்து நடவடிக்கை எடுத்துள்ளது.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் ரெயில்வே கேட்டில், கேட் கீப்பர் அலட்சியமாக தூங்கியதால் ரெயிலில் வேன் மோதிய கோர விபத்தில் 3 பள்ளி மாணவர்கள் உயிரிழந்தது. சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் கேட் கீப்பரை தாக்கினர். வடமாநிலத்தவர் என்பதால் மொழி புரியாமல் விபத்து நடந்ததாகவும், இங்குள்ள சூழலுக்கு ஏற்ப உள்ளூர் நபரை நியமிக்க வேண்டும் எனவும் மக்கள் வலியுறுத்தினர். இதையடுத்து ரெயில்வே நிர்வாகம், தமிழரான ஆனந்தராஜை புதிய கேட் கீப்பராக நியமித்துள்ளது. “விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்படும்” எனவும் தெற்கு ரெயில்வே அறிவுறுத்தியுள்ளதாக ஆனந்தராஜ் தெரிவித்துள்ளார்.














