இளங்கலை படிப்புகளுக்கான பல்கலை பொது நுழைவு தேர்வை 200க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் தெரிவு செய்திருப்பதாக யுஜிசி அதிகாரிகள் தெரிவித்தனர்.
பல்கலைக் கழகங்களுக்கான பொதுநுழைவு தேர்வை (கியூட்) தேசிய முகமை அமைப்பு நடத்தி வருகிறது. இந்நிலையில் 44 ஒன்றிய பல்கலைக்கழகங்கள், 33 மாநில பல்கலைக்கழகங்கள் உட்பட 206 பல்கலைக்கழகங்கள் கியூட் தேர்வை தேர்வு செய்துள்ளன. கடந்தாண்டு 90 ஆக மட்டுமே இருந்தது என யுஜிசி அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பல பல்கலைக்கழகங்கள் சேர்க்கைக்கான கியூட் தேர்வை தேர்ந்தெடுக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு மார்ச் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் இளங்கலை படிப்புகளுக்கான சேர்க்கை ஜூலை மாதத்துக்குள் முடிவடையும். ஆகஸ்ட் 1ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.