சைபர் தாக்குதல் நாட்டின் பாதுகாப்பு உள்கட்டமைப்பில் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள தேசிய ராணுவ கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், சைபர் தாக்குல் ஆபத்தானது. இது நாட்டின் பாதுகாப்பு உள்கட்டமைப்பில் பாதிப்பை ஏற்படுத்தி பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. இது நம்முடைய பழங்கால நெறிமுறைகள், அதன் வலுவான தார்மீக அடித்தளங்களின் ஒரு பகுதியாகும்.
சைபர் தாக்குதலில் எரிசக்தி துறை மிக முக்கிய இலக்காக உள்ளது. இது மட்டுமின்றி போக்குவரத்து, பொதுத்துறை சேவைகள், தொலைத்தொடர்பு மற்றும் முக்கியமான உற்பத்தி தொழில்களும் இந்த தாக்குதலால் பாதிக்கப்படக் கூடியவை. மற்றவர்களின் பாதிப்பை வைத்து வளமான இந்தியா உருவாக்கப்படாது என தெரிவித்தார்.














